கோவையில்‌ தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அமைச்சர்‌ மா.சுப்பிரமணியன்‌ மற்றும்‌ அமைச்சர்‌ சக்கரபாணி ஆகியோர்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு!

கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ மெக்ரிக்கா்‌ சாலையில்‌ தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை மருத்துவம்‌ மற்றும்‌ மக்கள்‌ நல்வாழ்வுத்துறை அமைச்சா்‌ மா.சுப்பிரமணியன்‌ அவர்கள்‌, உணவு மற்றும்‌ உணவுப்‌ பொருள்‌ வழங்கல்‌ துறை அமைச்சர்‌ அர.சக்கரபாணி ஆகியோர்‌ இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ மெக்ரிக்கா்‌ சாலையில்‌ தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை மருத்துவம்‌ மற்றும்‌ மக்கள்‌ நல்வாழ்வுத்துறை அமைச்சா்‌ மா.சுப்பிரமணியன்‌ அவர்கள்‌, உணவு மற்றும்‌ உணவுப்‌ பொருள்‌ வழங்கல்‌ துறை அமைச்சர்‌ அர.சக்கரபாணி ஆகியோர்‌ இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



கோவை மாநகராட்சி மத்திய மண்டலம்‌ மெக்ரிக்கா்‌ சாலையில்‌ தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மருத்துவம்‌ மற்றும்‌ மக்கள்‌ நல்வாழ்வுத்துறை அமைச்சர்‌, உணவு மற்றும்‌ உணவுப்‌ பொருள்‌ வழங்கல்‌ துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர்‌ தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில்‌ வசிக்கும்‌ மக்களுக்கு தேவையான அத்தியாவசியப்‌ பொருட்கள்‌ கிடைக்கப்‌ பெறுகின்றனவா எனவும்‌, கிருமி நாசினி மருந்துகள்‌ தெளிக்கப்படுகிறதா எனவும்‌ கேட்டறிந்தார்.



பின்னர், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில்‌ கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வரும்‌ பணிகளையும்‌, கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வரும்‌ பணிகளையும்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட பின்னா்‌ அப்பகுதியில்‌ வசிக்கும்‌ பொதுமக்களிடம்‌ அனைவரும்‌ கட்டாயம்‌ முகக்கவசம்‌ அணியவும்‌, சமூக இடைவெளியை பின்பற்றவும்‌, அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவி சுத்தம்‌ செய்திட வேண்டுமெனவும்‌, அவசியம்‌ இல்லாமல்‌ வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்‌ எனவும்‌, கொரோனா தொற்று பரவுதலை தடுக்கும்‌ பொருட்டு பொதுமக்கள்‌ அனைவரும்‌ அரசின்‌ வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடந்திட வேண்டும்‌ என அமைச்சர்‌ மா.சுப்பிரமணியன்‌ மற்றும் அமைச்சா்‌ சக்கரபாணி ஆகியோர்‌ கேட்டுக்கொண்டனர்.



இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் எஸ்‌.நாகராஜன்‌ இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌, நகர்‌ நல அலுவலர்‌ மரு.ராஜா, மேற்கு மண்டல உதவி ஆணையர்‌ சுந்தாராஜ்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...