கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் மெக்ரிக்கா் சாலையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அவர்கள், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் மெக்ரிக்கா் சாலையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கப் பெறுகின்றனவா எனவும், கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்படுகிறதா எனவும் கேட்டறிந்தார்.

பின்னர், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வரும் பணிகளையும், கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வரும் பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட பின்னா் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை பின்பற்றவும், அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவி சுத்தம் செய்திட வேண்டுமெனவும், அவசியம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும், கொரோனா தொற்று பரவுதலை தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் அனைவரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடந்திட வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அமைச்சா் சக்கரபாணி ஆகியோர் கேட்டுக்கொண்டனர்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவர்கள், நகர் நல அலுவலர் மரு.ராஜா, மேற்கு மண்டல உதவி ஆணையர் சுந்தாராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.