நீலகிரியில் புயல் மற்றும் கன மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் வருகை..!

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் புயல் மற்றும் கன மழை காரணமாக முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் நீலகிரி வந்தனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் புயல் மற்றும் கன மழை காரணமாக முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் நீலகிரி வந்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் புயல் மற்றும் கன மழை காரணமாக ஆங்காங்கே மரங்கள் சாலைகளில் விழுந்து வருகின்றன.



குறிப்பாக, குன்னூர் கோத்தகிரி சாலையில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் நீலகிரி மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டதன் பேரில் சீனியர் கமாண்டர் ரேகா நம்பியார் உத்தரவின் பேரில் கமாண்டர் கணேஷ் பிரசாத் தலைமையில் 44 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் நீலகிரி வந்தனர்.



நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், உள்ளிட்டப் பகுதிகள் 283 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. வெள்ளப் பெருக்கு நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடர் காலங்களில் இப்பகுதிகளில் உள்ள மக்கள் தங்க வைக்க 456 பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், நீலகிரியில் உள்ள பேரிடர் குழுக்களுடன் இணைந்து செயல்பட அரக்கோணத்தில் இருந்து கமாண்டர் கணேஷ் பிரசாத் தலைமையில் 44 பேர் கொண்ட பேரிடர் குழுக்கள் நீலகிரிக்கு விரைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் நாளை மழையின் அளவு மிக அதிகமாக இருக்கும் என்றும், தாக்குதலை சமாளிக்க பேரிடர் குழுக்கள் நீலகிரி மாவட்டத்தில் மீட்புக்கருவிகளுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள நீலகிரி மாவட்டத்திற்கு வந்துள்ளதாக கமாண்டர் கணேஷ் பிரசாத் தெரிவித்தார்.

Newsletter

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...