முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு உதவியாளராக இருந்த பார்த்திபனின் விருப்ப ஓய்வு மனு நிராகரிப்பு..!

கோவை: தமிழக உள்ளாட்சித்துறை முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு உதவியாளராக இருந்த பார்த்திபன் என்பவரின், விருப்ப ஓய்வு மனுவை, கோவை மாநகராட்சி நிராகரித்தது.


கோவை: தமிழக உள்ளாட்சித்துறை முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு உதவியாளராக இருந்த பார்த்திபன் என்பவரின், விருப்ப ஓய்வு மனுவை, கோவை மாநகராட்சி நிராகரித்தது.

தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த வேலுமணிக்கு உதவியாளராக, கோவை மாநகராட்சியின் சார்பில், உதவி பொறியாளர் பார்த்திபன் என்பவர் நியமிக்கப்பட்டு இருந்தார். சில ஆண்டுகளுக்கு முன், இருதய பாதிப்பு ஏற்பட்டதால், உதவியாளர் பொறுப்பில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். அறுவை சிகிச்சை செய்து கொண்ட பார்த்திபன், மருத்துவ விடுப்பில், சொந்த ஊருக்குச் சென்றார். மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்றார். தன்னால் தொடர்ந்து பணியாற்ற முடியாது என நினைத்த அவர், விருப்ப ஓய்வு கேட்டு, மாநகராட்சிக்கு விண்ணப்பித்தார். விடுப்பு முடிந்து, பணியில் மீண்டும் இணைந்த பிறகே, விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்க முடியும் என கூறி, அவ்விண்ணப்பத்தை, மாநகராட்சி நிர்வாகம் நிராகரித்தது.

இதன் காரணமாக, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில், அவர் முறையிட்டுள்ளார்.

இவருக்கு பதிலாக, உதவியாளராக நியமிக்கப்பட்ட இளம் பொறியாளர் சரவணன், தேர்தல் சமயத்தில், லட்சக்கணக்கில் பணம் வைத்திருந்த குற்றத்துக்காக, சமீபத்தில், ‘சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

Newsletter

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...