கோவை: அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கனமழை, நிலச்சரிவு முன்னெச்சரிக்கையைத் தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்புப் படையினர், கோவை மற்றும் மதுரையில் முகாமிட்டுள்ளனர்.

அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும், ‘தவுக்தே' புயல் காரணமாக, கனமழை கொட்டும் என்றும், நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து, இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் இருந்து, தேசிய பேரிடர் மீட்பு படையினர், தமிழகம், கேரளாவில், புயல், மழை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கோவை, மதுரை மாவட்டங்களுக்கு தலா இரு குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கோவை வந்துள்ள மீட்புப் படையினர், 44 பேரும் துடியலூரில் முகாமிட்டுள்ளனர். இந்தநிலையில், தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரிகள், ‘‘தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி மாவட்டங்கள், கேரள மாநிலம், வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு, திருச்சூர், எர்ணாகுளம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கொல்லம், இடுக்கி ஆகிய பகுதிகளில் கன மழை பெய்யும் என, வானிலை மையம் அறிவித்துள்ளது. எனவே, மீட்பு பணி மேற்கொள்ள, 13 குழுக்களைச் சேர்ந்த, 260 வீரர்கள் அப்பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தேவைப்பட்டால், மேலும் வீரர்கள் அனுப்பி வைக்கப்படுவர்.'' என்று தெரிவித்துள்ளனர்.