திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் 1135 ரேஷன் கடைகளிலுள்ள 7,51,045 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா முதற்கட்ட நிவாரண தொகையான ரூபாய் இரண்டாயிரம் வழங்கும் பணி தொடங்கியது.

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், கொரோனா சிறப்பு நிவாரண நிதி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதில் முதல் கட்டமாக ரூ.2000 வழங்கும் பணியை தமிழக முதல்வர் கடந்த 10ஆம் தேதி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகள் மூலமாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் தவணை ரூ.2000 வழங்கும் பணி தொடங்கியது.
இதன் ஒருபகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் 1135 ரேஷன் கடைகளிலுள்ள 7,51,045 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா முதற்கட்ட நிவாரண தொகையான ரூபாய் இரண்டாயிரம் வழங்கும் பணி தொடங்கியது.

முன்கூட்டியே வழங்கப்பட்ட டோக்கன்களின் அடிப்படையில், பயனாளிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாள் மற்றும் நேரத்தின் அடிப்படையில் காலை 8 முதல் 12 மணி வரை சமூக இடைவெளியைக் கடைபிடித்து வரிசையாக வந்து இந்தத் தொகையினைப் பெற்று செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் காங்கேயத்திலும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி தாராபுரத்திலும், திருப்பூரில் திமுக எம்எல்ஏ செல்வராஜும் நிவாரணத் தொகையை வழங்கினர்.