வால்பாறையில் சூறாவளி காற்றுடன் கனமழை... ஆறுகளில் வெள்ளப்பெருக்கு..!

வால்பாறை: வால்பாறையில் டாக்ட்டே புயலின் தொடர்ச்சியாக வால்பாறை நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.


வால்பாறை: வால்பாறையில் டாக்ட்டே புயலின் தொடர்ச்சியாக வால்பாறை நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.



கோவை மாவட்டம் வால்பாறையில் டாக்ட்டே புயலின் தொடர்ச்சியாக வால்பாறை நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்து சாலைப் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. இரவு மின் விநியோகம் பாதிப்படைந்துள்ளது. தொலைத்தொடர்பு சேவையும் பாதிப்படைந்துள்ளது.



வால்பாறை வட்டாட்சியர் ராஜா பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில், கனமழை தொடர்பான முக்கிய நிகழ்வுகள், பாதிப்புகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அரசுத்துறைகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டிய நேர்வுகள் முதலான எந்தச் சிறிய தகவலாக இருப்பினும் காலதாமதம் ஏதுமின்றி எந்த நேரம் ஆயினும் தனது அலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். வட்டாட்சியர் அலைபேசி எண்: 944 5000 577. இன்று காலை 6 மணி நிலவரப்படி வால்பாறையில் 70 மி.மீ., தாலுக்கா அலுவலகத்தில் 68 மி.மீ., கீழ் நீரார் அணை 65 மி.மீ., மேல் நீரார் அணை 69 மி.மீ., சோலையார் அணை 99 மி.மீ மழை பதிவாகி உள்ளது. வால்பாறை வட்டாட்சியர் ராஜா தலைமையில் வருவாய்த்துறையினர் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...