பொள்ளாச்சி: பொள்ளாச்சி புதிய அரசு மருத்துவமனை 200 ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் தயாராகி வருவதாக ஊரக நலப்பணிகள் இயக்குநர் குருநாதன் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி அரசு மருத்துவமனை கடந்த 2009 ஆம் ஆண்டு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதையடுத்து இன்று பொள்ளாச்சி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் மருத்துவர் குருநாதன் தலைமையிலான மருத்துவ குழுவினர் ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த குருநாதன், பொள்ளாச்சியில் புதிதாக கட்டப்பட்ட அரசு மருத்துவமனையில் வரும் 18ஆம் தேதி முதல் ஆக்சிஜன் வசதியுடன் 100 படுக்கைகள் புதிதாக ஏற்படுத்தப்படும். மொத்தம் 200 படுக்கை வசதிகள் ஆக்சிஜன் வசதிகளுடன் ஏற்பாடு செய்யப்படும்.
மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் பல்நோக்கு பணியாளர்கள் அனைவருக்கும் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறையை போக்க புதிதாக பணியாளர்கள் நியமிக்க கூடிய விரைவில் மாவட்ட நிர்வாகத்திற்கு அதிகாரம் வழங்கப்படும்,” என்றார்.