பொள்ளாச்சியில் இஸ்லாமியர்கள் வீடுகளிலேயே ரமலான் கொண்டாடினர்!

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளிலேயே குடும்பத்தினருடன் தொழுகையில் ஈடுபட்டு ரமலான் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.


பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளிலேயே குடும்பத்தினருடன் தொழுகையில் ஈடுபட்டு ரமலான் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இஸ்லாமிய மக்களின் முக்கியப் பண்டிகையாக கருதப்படும் ரமலான் பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

கொரோனோ வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அனைத்து பள்ளிவாசல்களும் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக இஸ்லாமிய மக்கள் இன்று வீடுகளிலேயே எளிய முறையில் ரமலான் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.



பொள்ளாச்சி பகுதியில் இஸ்லாமிய மக்கள் அதிகமாக வசிக்கும் குமரன் நகர், கண்ணப்பன் நகர், நேரு நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களை அழைத்து சமூக இடைவெளியுடன் சிறப்பு தொழுகை நடத்தினார்கள்.

கொரோனோ வைரஸ் என்ற கொடிய நோய் இந்த நாட்டை விட்டு அகல வேண்டுமென்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டுள்ளதாகவும், கொரோவை வெல்ல எளிய முறையில் கொண்டாடுவதாக இஸ்லாமியர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...