கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கி உதவும் நோக்கில் 'ரோட்டரி கிளப் கோயம்புத்தூர் சைபர் சிட்டி' சார்பில், 'ZF Windpower' நிறுவனத்துடன் இணைந்து ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்சிஜன் ஜெனரேட்டர் கருவிகள் வழங்கப்படுகின்றன.
கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கி உதவும் நோக்கில் 'ரோட்டரி கிளப் கோயம்புத்தூர் சைபர் சிட்டி' சார்பில், 'ZF Windpower' நிறுவனத்துடன் இணைந்து ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்சிஜன் ஜெனரேட்டர் கருவிகள் வழங்கப்படுகின்றன.
இது குறித்து 'ரோட்டரி கிளப் கோயம்புத்தூர் சைபர் சிட்டி' நிர்வாகிகள் கூறியதாவது,
கோவையில் உள்ள 41 ரோட்டரி கிளப் இணைந்து பல்வேறு நல உதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எங்கள் கிளப், 'ரோட்டரி கிளப் கோயம்புத்தூர் சைபர் சிட்டி' சார்பில், 'ZF Windpower' நிறுவனத்துடன் இணைந்து ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய ஆக்சிஜன் ஜெனரேட்டர் கருவிகளை வாங்க ஆர்டர் கொடுத்துள்ளோம். 15 நாட்களில் அந்த கருவிகள் அனைத்தும் கோவை இ எஸ் ஐ மருத்துவமனையில் நிறுவப்படும். இந்தக் கருவிகள், 80 படுக்கைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் வழங்க உதவும்.
'ZF Windpower' தன் நிறுவனத்தின் சார்பில், கார்ப்ரேட் சமூக பங்களிப்பு (CSR) திட்டத்தின் கீழ் இந்த உதவியை செய்ய முன்வந்துள்ளார். துவக்கத்தில் 20 படுக்கைகளுக்கு தேவையான ஆக்சிஜன் ஜெனரேட்டர் கருவிகளை வழங்க திட்டமிட்டோம்.
ஆனால், சவுந்தர்ராஜன் என்பவர் கள நிலவரத்தை ஆராய்ந்து இ எஸ் ஐ மருத்துவமனை மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை பெற்று எங்களிடம் தெரிவித்த காரணத்தால் ஆக்சிஜன் தேவை அதிகம் உள்ளது தெரிய வந்தது.
இதையடுத்து, 20 படுக்கைகளுக்கு பதில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து 80 படுக்கைகளுக்கு உதவும் வகையில் ஆக்சன் ஜெனரேட்டர் கருவிகளை வாங்க முடிவு செய்து ஆர்டர்கள் கொடுத்துள்ளோம். மக்கள் நலப்பணிகளில் எங்கள் பங்களிப்பு எதிர்வரும் நாட்களிலும் தொடரும். இவ்வாறு நிர்வாகிகள் தெரிவித்தனர்.