தமிழக உள்ளாட்சித் துறை முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு உதவியாளராக சரவணன் ‘சஸ்பெண்ட்'..!

கோவை: தமிழக உள்ளாட்சித் துறை முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு உதவியாளராக இருந்தவர், மாநகராட்சி இளம் பொறியாளர் சரவணன். இரு மாதங்களாக பணிக்கு வராமல் அவர் ‘சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.


கோவை: தமிழக உள்ளாட்சித் துறை முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு உதவியாளராக இருந்தவர், மாநகராட்சி இளம் பொறியாளர் சரவணன். இரு மாதங்களாக பணிக்கு வராமல் அவர் ‘சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.

அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த வேலுமணிக்கு உதவியாளராக, கோவை மாநகராட்சி இளம் பொறியாளர் சரவணன் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் பெரும்பாலும் சென்னை அலுவலகத்தில் முகாமிட்டு பணியாற்றிக் கொண்டிருந்தார். தேர்தல் சமயத்தில் அவரிடம், 18 லட்சம் ரூபாயை தேர்தல் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்தனர்.

இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டது. மேலும், அமைச்சருக்கு உதவியாளராக செயல்பட்டவர்கள், தேர்தல் அறிவிக்கப்பட்டதும் வழக்கமான பணிக்கு திரும்ப வேண்டும். ஆனால், இரு மாதங்களாக சரவணன் பணிக்கு வராமல் இருந்தார். அவரை, மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன், சஸ்பெண்ட் செய்து, தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை சமர்ப்பித்தார்.

Newsletter

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...