வால்பாறை தேயிலைத் தோட்ட நிர்வாகிகளுடன் வட்டாட்சியர் ஆலோசனை..!

வால்பாறை: வால்பாறையில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தேயிலைத் தோட்ட நிர்வாகிகளுடன் வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ராஜா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


வால்பாறை: வால்பாறையில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தேயிலைத் தோட்ட நிர்வாகிகளுடன் வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ராஜா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறையில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. இங்கு சுமார் ஐம்பதாயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலையின் காரணமாக வால்பாறையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.



வால்பாறையில் கொரோனா பெருந்தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு முகாம்கள் மூலம் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. வருவாய்த் துறையும் காவல் துறையும் இணைந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ராஜா தலைமையில், காவல் ஆய்வாளர் மகேஸ்வரி உட்பிரையர்.டாடா.பாரி, அக்ரோ.பி.பிடிசி.பிகேடி.. வாட்டர் பால்.ஜெயஸ்ரீ ஆகிய தேயிலைத் தோட்ட நிர்வாகிகள் தொழிற்சங்க நிர்வாகிகள் கோழிக்கடை கணேசன் ஈகா பொன்னுசாமி டென்சிங் ஆகியோர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தொழிலாளர்கள் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் கண்டிப்பாகப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது. மேலும், தொழிற்சங்கம் சார்பில் மாலை 4 மணிக்கு பதில் மூன்று மணிக்கு பணியைக் கைவிட விடப்பட்ட கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...