நீலகிரி: கோத்தகிரி அருகே காட்டெருமை உலா வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி செல்லும் சாலையில் உள்ள வண்டிசோலை பகுதியில் சுற்றுலாப் பயணிகள் வருகை இல்லாததால் வாகன போக்கு வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. இந்நிலையில் குன்னூர் வண்டிச்சோலை செல்லும் சாலையின் ஓரத்தில் குடியிருப்பு அருகே காட்டெருமை திரிந்ததை பொதுமக்களில் சிலர் கண்டனர்.

நீண்ட நேரம் சாலையின் ஓரத்தில் குடியிருப்பின் அருகில் காட்டெருமை சுற்றித் திரிந்தது. பின்னர் அருகில் உள்ள பாரஸ்டேல்வனப்பகுதிக்குள் சென்றது. பொதுமக்களை தாக்கி அசம்பாவிதம் நடக்கும் முன் வனத்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.