தடுப்பூசி போடுவதில் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் படி தொழில் அமைப்புகள் கோரிக்கை!

கோவை: தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போட முன்னுரிமை தர வேண்டும் என கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.


கோவை: தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போட முன்னுரிமை தர வேண்டும் என கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் நாகராஜனிடம் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் ஜேம்ஸ் கூறியதாவது:

“தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில், நடப்பு கணக்கு வைத்துள்ள குறுந்தொழில்கள் அனைத்திற்கும் கடன் உதவி செய்ய வேண்டும். எதிர்வரும் ஓராண்டு காலத்திற்கு, குறு சிறு தொழில்களுக்கு வட்டி தள்ளுபடியும், தவணை ஒத்தி வைப்பு அளிக்க வேண்டும். குறு, சிறு தொழில்களில் உள்ள தொழிலாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு முன்னுரிமை தரப்பட வேண்டும்.

கொரோனா தவிர மற்ற நோய்களுக்கு சிகிச்சை பெற சிறிய மருத்துவமனைகளை அரசு அடையாளப்படுத்தி அறிவிக்க வேண்டும். ஓராண்டு காலத்திற்கு குறு,சிறு தொழில்களின் மின் கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி செய்ய வேண்டும். தற்போது தமிழக அரசு ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சில தொழிற்பிரிவுகள் இயங்க அனுமதித்து உள்ளது. இந்த தொழில் பிரிவினருக்கு தேவையான மூலப் பொருட்களை விநியோகம் செய்யும் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் சில மணி நேரங்கள் செயல்பட அனுமதிக்க வேண்டும்.” இவ்வாறு ஜேம்ஸ் கூறினார்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...