பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே மனைவியுடன் பழகிய நபரை வெட்டிய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் அருகே உள்ள பொங்காளியூரைச் சேர்ந்த காளிமுத்து(32), அவரது மனைவி நந்தினி இருவருக்கும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். நந்தினி கோட்டூரில் தனியாக வசித்து வருகிறார். இவருக்கும், பொங்காளியூரைச் சேர்ந்த விஷ்ணுபிரசாத்(27) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில், காளிமுத்து நேற்று முன்தினம் இரவு மனைவியின் வீட்டுக்குச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வீட்டில் விஷ்ணுபிரசாத் இருந்ததாக தெரிகிறது.
அப்போது காளிமுத்து, விஷ்ணுபிரசாத் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றியது. அந்த சமயத்தில் அங்கிருந்த அரிவாளை எடுத்த காளிமுத்து விஷ்ணு பிரசாத்தை வெட்டியுள்ளார் என்று கூறப்படுகிறது. படுகாயமடைந்த விஷ்ணுபிரசாத்தை உறவினர்கள் மீட்டு கோட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விஷ்ணுபிரசாத் புகாரின் அடிப்படையில் போலீசார் காளிமுத்து மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.