கோவை அரசு மருத்துவமனையில் படுக்கைகள் பற்றாக்குறையால் ஆம்புலன்சிலேயே நோயாளிகள் காத்திருக்கும் அவலம்!

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் படுக்கைகள் இல்லாததால் நோயாளிகள் ஆம்புலன்சிலேயே பலமணி நேரம் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.



கோவை: கோவை அரசு மருத்துவமனையில் படுக்கைகள் இல்லாததால் நோயாளிகள் ஆம்புலன்சிலேயே பலமணி நேரம் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை கருத்தில் கொண்டு படுக்கை வசதிகள் அதிகரிக்கப்பட்டன. எனினும், இந்த கொரோனா தொற்று இரண்டாவது அலை க்குப் பின்னர் முதல் முறையாக, கொரோனா தொற்று நோயாளிகளை சிகிச்சைக்கு அனுமதிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.



மருத்துவமனையில் படுக்கைகள் நிரம்பி வழிவதால் மேற்கொண்டு படுக்கை இல்லாமல் நோயாளிகள் காத்திருக்கின்றனர். எட்டுக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் ஆம்புலன்சிலேயே காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.



ஆம்புலன்சில் ஒரு நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனது உடல்நிலை சரியில்லாத தாயின் அருகில் கவலையுடன் ஆம்புலன்சிற்குள் அமர்ந்திருக்கிறார்.



மருத்துவமனையில் தவறான நிர்வாகத்தால் அவர் மட்டுமின்றி ஏழு நோயாளிகள், ஆம்புலன்சிற்குள் மூன்று மணி நேரமாக காத்திருக்கின்றனர். மேற்கு மாவட்டங்களிலேயே சிகிச்சை வசதிகளைப் பொறுத்தவரை முன்னணி மருத்துவமனைகளில் ஒன்றாக திகழும் கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவல காட்சி கடுமையான சூழலை வெளிப்படுத்துகிறது.

நோயாளிகள் தொடர்ந்து மூச்சு திணறும் நேரத்தில் நோயாளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாமல் மருத்துவமனை நிர்வாகம் போராடி வருவது தெளிவாகத் தெரிகிறது, மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் படுக்கைகளுக்கு காத்திருக்கின்றனர். அவர்களுக்கு அருகில் இருக்கும் உறவினர்கள், படுக்கைகள் கிடைக்கும் என நம்பிக்கை இல்லை என்று கூறுகின்றனர். தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அதிகம் செலவாவதால் சிகிச்சைக்கான செலவுகளைச் சமாளிக்க முடியாதவர்கள் கோவை அரசு மருத்துவமனை முன்பு பல மணி நேரம் காத்துக் கிடக்கின்றனர். அதனால்தான் இவ்வளவு நேரம் காத்திருக்க நேரிடுகிறது என்று நோயாளிகளுடன் உடன் வந்தவர்கள்விரக்தியுடன் கூறுகின்றனர்.

"தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்காக எங்களால் பெரிய தொகையை தர இயலவில்லை,” என அவர்கள் கூறுகின்றனர். கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள படுக்கைகள்அதிகபட்சமாக நிரம்பி விட்டது. கடுமையான அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகள் மட்டும் இங்கு அனுமதிக்கப்படுகின்றனர். அறிகுறியற்ற மற்றும் லேசான அறிகுறிகள் உள்ளவர்கள், கல்லூரிகள் மற்றும் அரங்குகளில் அமைக்கப்பட்ட பிற கொரோனா தொற்று பராமரிப்பு மையங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள்.

இது தவிர, இதுபோன்ற இன்னும் ஒரு சோகமான நிகழ்வு இதே நாளில் திருப்பூர் அரசு மருத்துவமனையில் நிகழ்ந்திருக்கிறது. அங்கு சிகிச்சைக்காக படுக்கைகள் கேட்டு ஆம்புலன்சில் காத்திருந்த நோயாளிகள் மூவர் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து கருத்து கேட்க கோவை மருத்துவமனை மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் நிர்மலாவை தொடர்பு கொள்ள முயற்சித்தோம். ஆனால், அவரது பதில் கிடைக்கவில்லை.

Newsletter

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...