வால்பாறையில் முழு ஊரடங்கை மீறியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு!

வால்பாறை: வால்பாறையில் கொரோனா முழு ஊரடங்கை மீறியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


வால்பாறை: வால்பாறையில் கொரோனா முழு ஊரடங்கை மீறியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதி மற்றும் டவுன் பகுதிகளில் காலை முதல் மதியம் 12 மணி வரை மளிகை கடை இறைச்சிக்கடை போன்றவைகள் திறக்கப்படுகின்றன.



12 மணிக்கு மேலாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு முழு ஊரடங்கு பின்பற்றப்படுகின்றது.

வால்பாறை காவல்துறை ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையில் 30 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் வால்பாறை அஞ்சலகம் மற்றும் புதிய பேருந்து நிலையம், காந்தி சிலை பேருந்து நிலையம் பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 12 மணிக்கு மேல் வால்பாறை பகுதிக்கு வரும் மக்கள் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரணைக்கு பின்னர் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் எந்த ஒரு காரணமும் இன்றி சுற்றி திரிபவர்களின் வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.



வால்பாறை பகுதியில் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சுமார் 41 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொது முடக்கம் காரணமாக 41 பேருந்துகளும் வால்பாறை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.



அனைத்து பேருந்துகளிலும் கொரோனா கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...