வால்பாறை: கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, வால்பாறை அரசு மருத்துவமனையில் பொதுமக்களின் நலன்கருதி கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் தேயிலைத் தோட்ட நிர்வாகிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பொது மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முகாமில் கலந்துகொண்டவர்களுக்கு கொரோனா சளி பரிசோதனையும் இரத்த அழுத்தப் பரிசோதனையும் நடைபெற்றது. தொடர்ந்து, முகாமில் பங்கேற்றவர்களின் ஆதார் எண்ணோடு விண்ணப்பங்கள் நிரப்பப்பட்டு அவர்களுடைய உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த முகாமில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டு பணியாற்றினர்.