வால்பாறை: கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசு அறிவித்த முழு ஊரடங்கு இன்று முதல் தமிழகம் முழுதும் அமலுக்கு வந்தது. ஒரு சில தளர்வுகளுடன் அமலாக்கப்பட்ட இந்த ஊரடங்கு நேரத்தில், வால்பாறையில் தேயிலை தோட்டப் பணிகள் இன்று வழக்கம்போல் நடைபெற்றன.

கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. அதன்படி, அத்தியாவசியத் தேவையான மளிகை, காய்கறி, பால், மருந்தகங்கள் திறக்கப்பட்டன. உணவகங்கள், தேநீர் கடைகளில் பார்சல் மட்டும் வழங்கப்பட்டன. பேருந்துகள், ஆட்டோக்கள், டாக்சிகள் ஓடவில்லை.

வால்பாறையில் முக்கியத் தொழிலான தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றன. இப்பணியில் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கு பெற்றனர். மேலும், தேயிலைத் தோட்டங்களில் மருந்து அடித்தல், உரம் போடுதல் போன்ற பணிகளும் நடைபெற்றன. தொழிலாளர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து பணியாற்றினர்.