முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோவை பெரியார் திராவிட கழக மகளிர் அணியினர் வாழ்த்து..!

கோவை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்கின்ற உத்தரவைப் பிறப்பித்ததற்காக கோவை பெரியார் திராவிட கழக மகளிர் அணியினர் வாழ்த்து தெரிவித்தனர்.


கோவை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்கின்ற உத்தரவைப் பிறப்பித்ததற்காக கோவை பெரியார் திராவிட கழக மகளிர் அணியினர் வாழ்த்து தெரிவித்தனர்.

தந்தை பெரியார் திராவிட கழகத்தைச் சேர்ந்த மகளிர் அணியினர் இன்று கோவை பேருந்தில் இலவசமாக பயணம் செய்து மீண்டும் காந்திபுரம் பேருந்து நிலையம் அடைந்தனர். பிறகு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மகளிர் அணியினர் நம்மிடம் கூறியதாவது:- ‘‘புதிதாகப் பதவியேற்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றவுடன் மகளிரின் நலனை கருத்தில் கொண்டு உள்ளூர் பேருந்துகளில் இலவசமாகப் பெண்கள் பயணம் செய்யலாம் என்கின்ற உத்தரவை பிறப்பித்திருந்தார்.

அதனடிப்படையில் நாங்கள் இன்று இலவசமாக நகரப் பேருந்துகளில் பயணம் செய்தோம். இதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஏழை, எளிய நடுத்தர குடும்பத்தில் உள்ள பெண்கள் தங்களுடைய குடும்பப் பொறுப்புகளை சுமந்து 8 ஆயிரம், 10 ஆயிரம், மதிப்பிலான சம்பளத்தில் வேலைகளுக்கு செல்கின்றனர். இந்தநிலையில், அவர்கள் தினம்தோறும் சம்பளம் போக பேருந்து கட்டணத்தை தனியாக எடுத்து வைக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த சூழ்நிலையில், புதிதாகப் பொறுப்பேற்றவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்கின்ற உத்தரவிட்டது, கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் மற்றும் வியாபாரங்களில் ஈடுபட்டுள்ள குடும்பப் பெண்களுக்கு மிகவும் நன்மை பயக்கும் விதமாக உள்ளது. அதனால், நாங்கள் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மகளிர் அணி சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.'' என்று கூறினர்.

Newsletter

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...