முதல்வராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் ஐந்து கோப்புகளில் கையெழுத்து!

சென்னை: முதல்வராக பதவி ஏற்ற மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் கொரோனா நிவாரணத் தொகையாக ரூ.4000 வழங்கும் உத்தரவு உள்ளிட்ட ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டார்


சென்னை: முதல்வராக பதவி ஏற்ற மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் கொரோனா நிவாரணத் தொகையாக ரூ.4000 வழங்கும் உத்தரவு உள்ளிட்ட ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டார்

தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து மு.க.ஸ்டாலின் இன்று முதலமைச்சராக பதவியேற்றார்.

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து தலைமை செயலகத்துக்குச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.

1.முதல் அரசாணையாக கொரோனா நிவாரணம் குடும்ப அட்டை ஒன்றுக்கு ரூ.4000 என அறிவிக்கப்பட்டிருந்த உத்தரவில் கையெழுத்திட்டார்.

இதன்படி முதல் தவணையாக மே மாதத்தில் ரூ.2000 ரொக்க தொகை 2 கோடியே, 7 லட்சத்து 66 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

2. ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும் அரசாணையில் இரண்டாவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார். இந்த அரசாணை இந்த மாதம் 16ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

3. பெண்கள், பணிக்குச் செல்லும் பெண்கள், படிக்கும் பெண்கள் இலவசமாக பேருந்தில் பயணம் செய்யும் திட்டத்தில் மூன்றாவதாக மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.

இந்த திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது.

4. தேர்தல் பரப்புரையின்போது பெறப்பட்ட மனுக்களை 100 நாட்களில் தீர்வு காண “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” என்ற திட்டத்தின் கீழ் துறை உருவாக்குவதற்கான கோப்பிலும் அவர் கையெழுத்திட்டார்.

5. கொரோனா சிகிச்சை பெறுவோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை செலவுகளை அரசே வழங்கும் திட்டத்திலும் மு.க.ஸ்டாலின் ஐந்தாவதாக கையெழுத்திட்டார்.

Newsletter

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...