குன்னூர் தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற திமுக எம் எல் ஏ கா.ராமசந்திரன் வனத்துறை அமைச்சராகிறார்!

குன்னூர்: குன்னூர் தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற திமுக எம் எல் ஏ கா.ராமசந்திரன் வனத்துறை அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார்


குன்னூர்: குன்னூர் தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற திமுக எம் எல் ஏ கா.ராமசந்திரன் வனத்துறை அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார்

ராமசந்திரன் கடந்த 09-08-1951 ம் ஆண்டு குன்னூர் அருகில் உள்ள இளித்துரை கிராமத்தில் பிறந்தவர். 70 வயதாகும் இவர் நீலகிரி மாவட்டத்தின் பூர்வகுடிகளான படுகர் இனத்தைசேர்ந்தவர்.

2006 ஆம்ஆண்டுநடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் கூடலூர் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் (அதிமுக) அ.மில்லரைவிட 27 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து திமுக அமைச்சரவையில் கதர் வாரிய துறை அமைச்சரானார்.

இவர் தேயிலை தொழிற்சாலை மற்றும் எஸ்டேட் அதிபராக உள்ளார். இவரது மனைவி பேபி அம்மாள், மகன் மதுசூதனன் மற்றும் வசந்தி என்ற மகளும் உள்ளனர். மகன் தந்தையின் தேயிலை தொழிற்சாலையை கவனித்துவருகிறார்.

பியூசி வரை படித்துள்ள இவர் 1971 ஆம் ஆண்டு திமுக கிளைச்செயலாளராக இளித்துரை பகுதிக்கு நியமிக்கப்பட்டார். அதன் பின் வட்டப் பிரதிநிதி, ஒன்றிய செயலாளர், செயற்குழு உறுப்பினர், நிலவள வங்கி தலைவர், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர், மாவட்டப் பிரதிநிதி, மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

தற்போது திமுகவின் தேர்தல் பணிக்குழு செயலாளராகவும் குன்னூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராகவும் உள்ளார். இவர் தற்போது மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக பொறுப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. நாளை சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் வனத்துறை அமைச்சராக பதவி ஏற்றுக் கொள்கிறார். கா.ராமசந்திரன் வனத்துறை அமைச்சராக பதவி ஏற்பது நீலகிரி மாவட்ட மக்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியுள்ளது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...