பொள்ளாச்சியில் ஊரடங்கால் வாழை இலை வியாபாரம் கடும் பாதிப்பு... நிவாரணம் வழங்கக் கோரி வியாபாரிகள் கோரிக்கை..!

பொள்ளாச்சி: ஊரடங்கால் வாழை இலை வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி பொள்ளாச்சியில் வாழை இலை வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர்.


பொள்ளாச்சி: ஊரடங்கால் வாழை இலை வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி பொள்ளாச்சியில் வாழை இலை வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர்.

பொள்ளாச்சி பகுதியில் தென்னை சாகுபடிக்கு அடுத்தபடியாக வாழை சாகுபடியை விவசாயிகள் அதிக அளவில் செய்து வருகின்றனர். வாழை சாகுபடி செய்யும் விவசாயிகளிடம் இருந்து வாழை இலைகளை வாங்கி, 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் மட்டுமில்லாமல் கோயில் விழாக்கள் போன்ற காலங்களில் வாழை இலையின் விற்பனை சூடுபிடித்து காணப்படும். ஆனால், கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கொரோனா தொற்று காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் சுப நிகழ்ச்சிகளும், கோயில் விழாக்கள் முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.



இதனால், வாழை இலை வியாபாரம் செய்யும் வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். குறைந்த வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வரும் எங்களுக்கு இந்த ஆண்டும் வியாபாரம் பாதித்து உள்ளதால், அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று வாழை இலை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...