சிறுமியின் ஆபாசப் படம் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த இளைஞர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது... கோவை போக்சோ கோர்ட் பரபரப்பு தீர்ப்பு..!

கோவை: கோவையில் 13 வயது சிறுமியின் புகைப்படங்களை ஆபாசமாக சித்திரித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட 21 வயது இௐளைஞர் மீது போக்சோ சட்டத்தின் மூலம் கோவை போக்சோ கோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.


கோவை: கோவையில் 13 வயது சிறுமியின் புகைப்படங்களை ஆபாசமாக சித்திரித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட 21 வயது இௐளைஞர் மீது போக்சோ சட்டத்தின் மூலம் கோவை போக்சோ கோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

கோவை மாவட்டம் ஆனைமலையைச் சேர்ந்த ரகமத்துல்லா என்பவருடைய மகன் முகமது சபீர் வயது 21. இவர் அந்தப் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்திரித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஆனைமலை போலீசில் புகார் செய்தனர். இந்தப் புகாரின் பேரில் ஆனைமலை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, முகம்மது சமீர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்ந்து அவரை, கடந்து 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24-ஆம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கு மீதான விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது. சிறுமியின் படத்தை ஆபாசமாக சித்திரித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட முகமது சமீருக்கு ஐந்து ஆண்டு சிறைத்தண்டனையும் ஆறாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, முகமது சபீரை போலீஸார் சிறையில் அடைத்தனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...