கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டல பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.24க்குட்பட்ட ஃபாதர் ரேண்டி தெரு மற்றும் வார்டு எண்.21க்குட்பட்ட கோகுலம் காலனி ஆகிய பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர், அந்தப் பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்ட பின்னர், அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறும், அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுமாறும், மாநகராட்சியின் அனைத்து கோவிட் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் பொது மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி கொரோனா தொற்று இல்லாத மாநகராட்சியாக திகழ முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

பின்னர், வார்டு எண்.15க்குட்பட்ட மருதமலை ரோடு, பி.என்.புதூரில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை (Swap test) செய்யப்பட்டுவரும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, மேற்கு மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.