முகக்கவசம் அணிதல்... சமூக இடைவெளி கடைப்பிடித்தல்... கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்... கோவை மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தல்..!

கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டல பகுதிகளில்‌ கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டல பகுதிகளில்‌ கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.24க்குட்பட்ட ஃபாதர் ரேண்டி தெரு மற்றும்‌ வார்டு எண்‌.21க்குட்பட்ட கோகுலம்‌ காலனி ஆகிய பகுதிகளில்‌ தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர்‌, அந்தப் பகுதிகளில்‌ கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வரும்‌ பணிகளை பார்வையிட்ட பின்னர்‌, அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம்‌ அனைவரும்‌ முகக்கவசம்‌ கட்டாயம்‌ அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறும்‌, அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுமாறும்‌, மாநகராட்சியின்‌ அனைத்து கோவிட்‌ தடுப்பு நடவடிக்கைகளுக்கும்‌ பொது மக்கள்‌ முழு ஒத்துழைப்பு வழங்கி கொரோனா தொற்று இல்லாத மாநகராட்சியாக திகழ முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.



பின்னர்‌, வார்டு எண்‌.15க்குட்பட்ட மருதமலை ரோடு, பி.என்‌.புதூரில்‌ பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை (Swap test) செய்யப்பட்டுவரும்‌ பணிகளையும்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, மேற்கு மண்டல சுகாதார அலுவலர்‌ குணசேகரன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடன்‌ இருந்தனர்‌.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...