கோவை மாவட்ட ஆட்சியரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளரான வானதி சீனிவாசன்..!

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜனை கோவை தெற்கு தொகுதியில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.



கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜனை கோவை தெற்கு தொகுதியில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.



கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், ‘‘கொரோனா இரண்டாவது அலை மிக அதிகமாக பரவி வரும் சூழலில் தேவைப்பட கூடிய அளவு ஆக்சிஜன் தடுப்பூசி தொடர்பாக இந்த தொகுதியில் உள்ள அரசு தனியார் மருத்துவமனைகளின் உடனடி தேவை என்ன என்பதை பற்றியும் மரியாதை நிமித்தமாகவும் ஆட்சியரை சந்தித்தேன். ஒரு சில தேவைகளை அவர் என்னிடம் கூறியுள்ளார். தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வாய்ப்பு இருப்பதாகக் கூறியதையடுத்து இது சம்பந்தமாக மத்திய அமைச்சரிடம் பேச உள்ளேன். கொரோனா உதவிகள் பெறுவதற்கு மக்கள் சிரமப்படுவதால், படுக்கை வசதிகள் குறித்து தெரிந்துகொள்ள ஒரு உதவி மையத்தை ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன். ஆட்சியர் அதையும் நடைமுறைப்படுத்துவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

சென்னையில் அம்மா உணவும் தாக்கப்பட்ட சம்பவம் போன்று திமுக பல சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது. புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைவர்கள், இதை மனதில் வைத்துக் கொண்டு தங்களுடைய கட்சித் தொண்டர்களுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்க வேண்டும். மேலும், நடவடிக்கை எடுத்தால் நல்லது. இதை அரசியல் ரீதியாக முன்னெடுக்க வேண்டும். அதை ஆரமத்திலேயே கட்டுப்படுத்த வேண்டும் அப்போதுதான் அரசுக்கும் மக்களுக்கும் எந்தவிதமான பிரச்சினையும் இருக்காது.

உத்தரபிரதேச முதல்வர் ஆதி யோகித்யநாத் கோவை வந்தபோது ஏற்பட்ட சம்பவத்தில் யார் உள்ளார்கள்? கல்லெறிந்து வீசிய நபர் யார்? அந்த நபரைக் குறித்து விசாரிக்க புகார் கொடுத்தேன். ஆனால், இன்று வரைக்கும் நடவடிக்கை இல்லை. பதற்றத்தை உருவாக்குவதற்காக சமூக விரோதிகள் ஈடுபட்டுள்ளனர்'' எனவும் தெரிவித்தார்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...