வால்பாறை: வால்பாறையில் படகு இல்லம் பணி மந்தமாக நடைபெற்று வருகிறது. இதனால், படகு இல்லத்தில் உள்ள தண்ணீர் துர்நாற்றம் வீசுகிறது. இதனையடுத்து நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் நீண்டநாள் கோரிக்கையான படகு இல்லம் அமைக்க, கடந்த ஆண்டு வால்பாறை புதிய பேருந்து நிலையம் அருகில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் 4.2 ஏக்கர் இடத்தில் சுமார் 3.47 கோடி மதிப்பில் படகு இல்லம் அமைக்கும் பணி நடைபெற்றது. படகு இல்லம் அருகில் கடைகள் கட்டி வால்பாறையில் சுற்றுலா வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைக்கப்படும் என்று இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.
படகு இல்லம் பணி முழுமையாக நிறைவு அடையாமல் தேர்தலுக்கு முன்பு அவசர அவசரமாக திறப்பு விழா கொண்டாடப்பட்டது.

இதில் தற்போது படகு இல்லத்தில் பணிகள் மந்தமாக உள்ளநிலையில், படகு இல்லத்தில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீர் சுத்திகரிப்பு செய்யாமலும் குப்பைகள் நிறைந்து குப்பைத் தொட்டி போல் உள்ளது. இதனால், தண்ணீர் துர்நாற்றம் வீசுவதால் மக்கள் நோய்த்தொற்று ஏற்படும் என்ற அச்சத்தில் உள்ளனர்.

மேலும், படகு இல்லத்தை சுற்றியுள்ள நடைபாதைகள் மற்றும் மின் விளக்குகள் அமைக்கும் பணி நிறைவடையாமல் உள்ளதால், மக்கள் தங்களது அதிருப்தியைத் தெரிவிக்கின்றனர். வால்பாறையில் மே மாதம் இறுதியில் கோடை விழா நடைபெறும் நிலையில் படகு இல்லத்தின் பணிகளை விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.