வெள்ளலூர் குப்பை கிடங்கில் டிரோன் கேமரா மூலம் தேங்கியுள்ள குப்பைகளை அளவிடும் பணி மீண்டும் நடத்த திட்டம்

கோவை: கோவை மாநகராட்சி சார்பில் பயோமைனிங் திட்டம் தொடர்பாக வெள்ளலூர் குப்பைகிடங்கில் தேங்கியுள்ள குப்பைகளை டிரோன் கேமரா மூலம் அளவிடும் பணி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது.



கோவை: கோவை மாநகராட்சி சார்பில் பயோமைனிங் திட்டம் தொடர்பாக வெள்ளலூர் குப்பைகிடங்கில் தேங்கியுள்ள குப்பைகளை டிரோன் கேமரா மூலம் அளவிடும் பணி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது.

தற்போது, மீண்டும் இரண்டாம் கட்ட ஆய்வுக்காக டிரோன மூலம் குப்பைகளை அளவிட திட்டமிடப்பட்டுள்ளது என மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

100 வார்டு குப்பை..!







கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் தினமும் 800 முதல் 1,000 டன் வரை குப்பைகள் சேகரமாகிறது. இந்த குப்பைகள் அனைத்தும் வெள்ளலூரில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான சுமார் 650 ஏக்கர் குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இந்த குப்பை கிடங்கின் ஒரு பகுதியில் 60 ஏக்கர் பரப்பளவில் 9 லட்சம் மெட்ரிக்டன் அளவிற்கு தரம்பிரிக்கப்படாத குப்பைகள் தேக்கம் அடைந்து உள்ளன.

சுகாதார சீர்கேட்டை சரிசெய்ய பயோமைனிங் திட்டம்.

இந்த குப்பைகளால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், ஈக்கள் தொல்லையும் அதிகமாக உள்ளது. இந்த குப்பைகளை பயோ மைனிங் முறையில் அழிக்க மாநகராட்சி முடிவு செய்தது. இதற்காக ரூ.60 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டது.இந்த திட்டத்தை தனியார் அமைப்பு செயல்படுத்துகிறது. இதற்காக வெள்ளலூர் குப்பை கிடங்கில் தேங்கியுள்ள குப்பைகள் அளவு எவ்வளவு, என்ன மாதிரியான குப்பைகள் அதிகமாக தேங்கியுள்ளன என்பது குறித்து அளவீடு செய்ய அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் குரியன் ஜோசப் தலைமையிலான குழுவினர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரவழைக்கப்பட்டனர்.

நவீன கேமராக்கள் மூலம் அளவீடு

இவர்கள் டிரோன் கேமராவில் பொருத்தப்பட்டுள்ள நவீன கேமராக்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் உதவியுன் இங்கு தேங்கியுள்ள குப்பைகளை அளவீடும் பணியில் ஈடுபட்டனர். அதன் பின் பயோ மைனிங் திட்டம் மூலம் தினமும் 40 டன் வரை குப்பைகள் அழிக்கப்பட்டு உரமாக்கப்பட்டு வருகின்றனர். இதனிடையே இரண்டாம் கட்ட ஆய்வுக்காக மீண்டும் அண்ணா பல்கலைக்கழக குழுவினர் வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு வரவுள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பயோ மைனிங் திட்டம் தொடர்பாக இரண்டாம் கட்ட ஆய்வுக்காக அண்ணா பல்கலைக்கழக குழுவினர் விரைவில் மீண்டும் வெள்ளலூர் வரவுள்ளனர். இவர்கள் மீண்டும் டிரோன் கேமிரா மூலம் குப்பைகளை அளவிடும் பணி மேற்கொண்டு அதன் பின் இரண்டாம் கட்ட ஆய்வறிக்கையை சமர்பிப்பார்கள். அதன் பின் தினமும் கூடுதலாக எவ்வுளவு டன் வரை குப்பைகளை அழிக்க முடியும் என கணக்கீடு செய்து குப்பைகள் அழிப்பு பணி தொடரும்,’’ என்றார்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...