கோடை விடுமுறையில் கோவை நீதிமன்றங்கள் செயல்படும், தேதிகள் அறிவிப்பு!

கோவை: கோடை விடுமுறையில் கோவை மாவட்ட நீதிமன்றங்கள் எந்தெந்த தேதிகளில் செயல்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


கோவை: கோடை விடுமுறையில் கோவை மாவட்ட நீதிமன்றங்கள் எந்தெந்த தேதிகளில் செயல்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களுக்கு, மே 1 முதல் 31 வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளில், ஆன்லைன் வாயிலாக மனுக்கள் தாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஜாமீன் மனுக்கள் மற்றும் இடைக்கால உத்தரவு கோரும் மனுக்கள், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.

கிரிமினல் வழக்குகள் வாரந்தோறும், திங்கள் கிழமை தாக்கல் செய்ய வேண்டும். இந்த மனுக்கள் வியாழன் அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

சிவில் வழக்குகளை, மே 5, 11, 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த மனுக்கள் முறையே, மே 7, 13, 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

கிரிமினல் வழக்குகளை, கோவை முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிபதி நாகராஜனும், சிவில் வழக்குகளை, கோவை இரண்டாவது கூடுதல் சார்பு நீதிபதி சந்தான கிருஷ்ணசாமியும் விசாரணை செய்ய உள்ளனர்.

Newsletter

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...