திருப்பூர் வடக்கு தொகுதியில் 6வது சுற்று முடிவில் அதிமுக முன்னிலை!

திருப்பூர்: திருப்பூர் வடக்கு தொகுதியில் 6வது சுற்றின் முடிவில் அதிமுக வேட்பாளர் விஜயகுமார் முன்னிலை வகிக்கிறார்.


திருப்பூர்: திருப்பூர் வடக்கு தொகுதியில் 6வது சுற்றின் முடிவில் அதிமுக வேட்பாளர் விஜயகுமார் முன்னிலை வகிக்கிறார்.

தமிழக சட்டப்பேரவையில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. திருப்பூர் (வடக்கு) தொகுதியில் அதிமுக வேட்பாளர் விஜயகுமார் 6வது சுற்றின் முடிவில் 23, 244 வாக்குகள் பெற்றுள்ளார்.

விஜயகுமார் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளரை விடவும் 10,888 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ரவி (எ) சுப்பிரமணியன் 12,356 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.

அமமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக வேட்பாளர் செல்வகுமார் 508 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் சிவபாலன் 2226 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஈஸ்வரன் 4138 வாக்குகள் பெற்றுள்ளார். நோட்டாவுக்கு376 வாக்குகள் கிடைத்துள்ளது.

Newsletter

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...