வால்பாறையில் கன்னி வைத்து காட்டு கோழியை பிடிக்க முயற்சித்தவர்களுக்கு ரூ.20,000 அபராதம்!

வால்பாறை: வால்பாறையில் கன்னி வைத்து காட்டு கோழியை பிடிக்க முயற்சி செய்த வட மாநிலத் தொழிலாளர்களுக்கு வனத்துறை ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.


வால்பாறை: வால்பாறையில் கன்னி வைத்து காட்டு கோழியை பிடிக்க முயற்சி செய்த வட மாநிலத் தொழிலாளர்களுக்கு வனத்துறை ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியில் வன விலங்குகள் தவிர காட்டுக் கோழிகள் இருவாட்சி பறவைகள் போன்றவை வாழ்கின்றன. வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் தேயிலைத் தோட்டங்களில் வடமாநில தொழிலாளர்கள் அதிகமாக வேலை செய்து வருகின்றனர். வால்பாறை அருகே மானாம்பள்ளி வன சரகத்திற்கு உட்பட்ட சங்கிலி ரோடு எஸ்டேட் பகுதியில் தேயிலை தோட்டத்தில் பணியாற்றும் உமேஷ் ஓரா, மதியாஸ் முண்டா இருவரும் காட்டு கோழியை பிடிக்க தேயிலைத் தோட்டத்தில் கன்னி வைத்தனர்.



மானாம்பள்ளி வனச்சரகத்தில் உட்பட்ட இடத்தில் கன்னி வைக்கப்பட்டதை கண்டறிந்த வனத்துறையினர், காட்டுக்கோழியை பிடிக்க முயற்சி செய்த இருவரையும் கைது செய்தனர். ஆனைமலை புலிகள் காப்பக இணை இயக்குனர் ஆரோக்கிய சேவியர் உத்தரவின்பேரில் இருவருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்தியதை அடுத்து இருவரும் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். வன விலங்குகளை தொந்தரவு செய்தாலோ வன விலங்குகளை பிடிக்க முயற்சி செய்தாலோ அது வன சட்டத்தின்படி குற்றமாகும். இத்தகைய குற்றத்தில் ஈடுபடுவோர் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...