கோவை: கோவையில் உள்ள தங்கும் விடுதிகளை கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்ற விடுதிகளின் உரிமையாளர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

கோவை மாநகராட்சி வளாகத்தில் கோயம்புத்தூர் போர்டிங் அண்டு லார்ட்ஜிங் அசோசியேஷன் நிர்வாகிகளுடன் மாநகராட்சி ஆணையர்மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் இயங்கி வரும் 72 தங்கும் விடுதிகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தற்காலிக சிகிக்சை மையங்கள் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மத்திய மற்றும் மாநில அரசுகளால் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தற்காலிக சிகிச்சை மையங்களை அமைக்க வேண்டும் என ஆணையர் கேட்டுக் கொண்டார். இதையடுத்து ஆணையரின் கோரிக்கையை ஏற்று இது குறித்து சங்க உறுப்பினர்களுக்கு தெரிவித்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் உரிய அனுமதி பெற்று உடனடியாக தற்காலிக சிகிச்சை மையங்களை அமைக்க சம்மதம் தெரிவித்தனர்.