கோவையில் கொரோனா சிகிச்சை மையங்களாக மாறும் தங்கும் விடுதிகள்!

கோவை: கோவையில் உள்ள தங்கும் விடுதிகளை கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்ற விடுதிகளின் உரிமையாளர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவையில் உள்ள தங்கும் விடுதிகளை கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்ற விடுதிகளின் உரிமையாளர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

கோவை மாநகராட்சி வளாகத்தில் கோயம்புத்தூர்‌ போர்டிங்‌ அண்டு லார்ட்ஜிங்‌ அசோசியேஷன்‌ நிர்வாகிகளுடன் மாநகராட்சி ஆணையர்மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இன்று ஆலோசனை மேற்கொண்டார். கோயம்புத்தூர்‌ மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில்‌ இயங்கி வரும்‌ 72 தங்கும்‌ விடுதிகளில்‌ கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தற்காலிக சிகிக்சை மையங்கள்‌ அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மத்திய மற்றும்‌ மாநில அரசுகளால்‌ பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தற்காலிக சிகிச்சை மையங்களை அமைக்க வேண்டும் என ஆணையர் கேட்டுக் கொண்டார். இதையடுத்து ஆணையரின் கோரிக்கையை ஏற்று இது குறித்து சங்க உறுப்பினர்களுக்கு தெரிவித்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம்‌ உரிய அனுமதி பெற்று உடனடியாக தற்காலிக சிகிச்சை மையங்களை அமைக்க சம்மதம்‌ தெரிவித்தனர்‌.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...