கோவை: கோவை அருகே குளத்தில் மீன் பிடித்த போது அறுந்து கிடந்த மின் வயரில் இருந்து தண்ணீர் மின்சாரம் பாய்ந்ததால் இருவர் பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை: கோவை அருகே குளத்தில் மீன் பிடித்த போது அறுந்து கிடந்த மின் வயரில் இருந்து தண்ணீர் மின்சாரம் பாய்ந்ததால் இருவர் பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மதுக்கரை வழுக்குப் பாறையில் ராமராஜ் என்பவரின் தோட்டத்தில் கேரளா மாநிலம் கொழிஞ்சாம்பாறை பகுதியை சேர்ந்த ராசு மற்றும் மீனாட்சிபுரம் பகுதியைச் மல்லிகா இருவரும் வேலை பார்க்கின்றனர்.
தோட்ட வேலையை முடித்துக்கொண்டு, இருவரும் தோட்டத்தின் அருகில் உள்ள குளத்தில் மீன் பிடிக்க சென்றனர். அந்த இடத்தில் மின் வயர் ஒன்று அறுந்து குளத்தில் கிடந்திருக்கிறது.

அதைக் கவனிக்காமல் முதலில் குளத்தில் இறங்கிய ராசு, தண்ணீரில் பாய்ந்த மின்சாரத்தால் சம்பவ இடத்திலேயே பலியானார்.

என்ன நடந்தது என்று தெரியாமல் ராசுவை காப்பாற்ற சென்ற மல்லிகாவும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அறுந்து கிடந்த மின்கம்பியில் இருந்து தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து இருவர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த கிணத்துக்கடவு போலீசார் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.