கோவையில் கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உரிய காலம் முடியும் வரை வெளியே வர வேண்டாம்‌ என மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்‌!

கோவை: கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டவர்கள்‌ தனிமைப்படுத்தல் காலம்‌ முடியும்‌ வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்‌ என மாநாகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் வேண்டுகோள்‌ விடுத்துள்ளார்.


கோவை: கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டவர்கள்‌ தனிமைப்படுத்தல் காலம்‌ முடியும்‌ வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்‌ என மாநாகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் வேண்டுகோள்‌ விடுத்துள்ளார்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல பகுதிகளில்‌ கொரோனா தடுப்பு பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ ஆய்வு மேற்கொண்டார். கிழக்கு மண்டலம்‌ விளாங்குறிச்சி, இரத்தினகரி ரோடு, ஏ.எம்‌.டி நகர்‌, வருமானவரித்துறை ஊழியாகள்‌ குடியிருப்பு மற்றும்‌ 32வது வார்டுக்கு உட்பட்ட செங்காளியப்பன்‌ நகர்‌ ஆகிய இடங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளை பார்வையிட்டார்.

தனிமைப்படுத்தப்பட்டவர்கள்‌ தனிமைப்படுத்தல் காலம்‌ முடியும்‌ வரை வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம்‌ எனவும்‌, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில்‌ கிருமி நாசினி மருந்து தெளிக்கவும் அறிவுறுத்தினார். பொதுமக்கள் அனைவரும்‌ கட்டாயம்‌ முகக்கவசம்‌ அணிய வேண்டும்‌, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்‌, அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்‌.

பொதுமக்கள்‌ அவசியமில்லாமல்‌ வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம்‌ என ஆணையர் கேட்டுக்கொண்டார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொது மக்கள்‌ முழு ஒத்துழைப்பு வழங்கும்படியும் மாநகராட்சி ஆணையர் கேட்டுக் கொண்டார்.



32வது வார்டில் சேரன்மா நகரில்‌ செயல்பட்டுவந்த தனியார்‌ பேக்கரி மற்றும்‌ சரவணம்பட்டி சாலையில்‌ செயல்பட்டுவந்த தனியார்‌ பேக்கரியில் கொரோனா தொற்று விதிமுறைகளை கடைபிடிக்காததால் அந்த பேக்கரிகளை மூட மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...