கோவை: கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தனிமைப்படுத்தல் காலம் முடியும் வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என மாநாகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவை: கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தனிமைப்படுத்தல் காலம் முடியும் வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என மாநாகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார். கிழக்கு மண்டலம் விளாங்குறிச்சி, இரத்தினகரி ரோடு, ஏ.எம்.டி நகர், வருமானவரித்துறை ஊழியாகள் குடியிருப்பு மற்றும் 32வது வார்டுக்கு உட்பட்ட செங்காளியப்பன் நகர் ஆகிய இடங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளை பார்வையிட்டார்.
தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தனிமைப்படுத்தல் காலம் முடியும் வரை வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் எனவும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி மருந்து தெளிக்கவும் அறிவுறுத்தினார். பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
பொதுமக்கள் அவசியமில்லாமல் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என ஆணையர் கேட்டுக்கொண்டார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கும்படியும் மாநகராட்சி ஆணையர் கேட்டுக் கொண்டார்.

32வது வார்டில் சேரன்மா நகரில் செயல்பட்டுவந்த தனியார் பேக்கரி மற்றும் சரவணம்பட்டி சாலையில் செயல்பட்டுவந்த தனியார் பேக்கரியில் கொரோனா தொற்று விதிமுறைகளை கடைபிடிக்காததால் அந்த பேக்கரிகளை மூட மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார்.