கோவையில் வாக்கு எண்ணிக்கை ஒத்திகை இன்று நடந்தது
கோவை: கோவை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கான ஒத்திகை நிகழ்ச்சி, வாக்கு எண்ணும் மையமான அரசினர் தொழில்நுட்ப கல்லூரியில்இன்று நடந்தது.
தமிழகத்தில் மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. கோவை மாவட்டத்தில் இதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வாக்கு எண்ணிக்கைக்கு இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளதால் வாக்கு எண்ணும் ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடந்தது.
இது குறித்து மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வாக்கு எண்ணும் மையத்தில் மேசைகள், மின் விளக்குகள் உள்பட வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏறப்படுத்தப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கையை பதிவு செய்வதற்காக அனைத்து மேசையிலும் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கையின் போது எந்த குளறுபடிகளும் நடக்காமல் இருக்கவும், வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ளும் நடைமுறைகள் குறித்து அலுவலர்கள் தெரிந்துகொள்ளும் வாக்கு எண்ணும் ஒத்திகை நிகழ்ச்சிஇன்று நடந்தது. இதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை சீல் பிரித்தல், வாக்குகள் எண்ணும் விதம், வாக்குகள் கம்ப்யூட்டரில் பதிவேற்றம் குறித்து விவரங்கள் தெரிவிக்கப்பட்டன. இதில் மாவட்டத்தின் பத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் உட்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.