கிணத்துக்கடவு அருகே தமிழக-கேரள எல்லையில் இ-பாஸ் இல்லாமல் வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்!

கோவை: கிணத்துக்கடவு அருகே தமிழக-கேரள எல்லையில் வருவாய் துறையினர் நடத்திய வாகன தணிக்கையில் இ-பாஸ் இல்லாமல் பயணித்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.


கோவை: கிணத்துக்கடவு அருகே தமிழக-கேரள எல்லையில் வருவாய் துறையினர் நடத்திய வாகன தணிக்கையில் இ-பாஸ் இல்லாமல் பயணித்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை மிகத் தீவிரமாக பரவி வருவதால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வர இ-பாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



இன்று கிணத்துக்கடவு அருகே உள்ள தமிழக கேரள எல்லைப் பகுதியான வீரப்ப கவுண்டனூரில் வருவாய் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். கிணத்துக்கடவு வருவாய் ஆய்வாளர் ராம்ராஜ் தலைமையில் விமல், மது கண்ணன், பன்னீர்செல்வம் ஆகிய கிராம நிர்வாக அலுவலர்கள் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.



அப்போது கேரள மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்த கார்கள், இருசக்கர வாகனம், சரக்கு வாகனங்களில் வந்தவர்களிடம் தமிழகத்திற்குள் வர இ-பாஸ் இருக்கிறதா என்று சோதனை செய்தனர்.



இ-பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டும் தமிழகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். இ-பாஸ் இல்லாமல் வந்தவர்கள் திருப்பி அனுப்பினர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...