கோவையில் பிரதம மந்திரி காப்பீடு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு காப்பீடு வழங்க வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை!

கோவை: கோவையில் பிரதம மந்திரி காப்பீடு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு காப்பீடு வழங்கும்படி மாவட்ட ஆட்சியரிடம் வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.



கோவை: கோவையில் பிரதம மந்திரி காப்பீடு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு காப்பீடு வழங்கும்படி மாவட்ட ஆட்சியரிடம் வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது;

கோவை மக்கள்‌ சேவை மையத்தின் சார்பில் கடந்த பிப்ரவரி மாதம்‌ மோடி முகாம்‌ என்ற பெயரில்‌ சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.



அந்த முகாமில்‌ பங்கேற்றவர்களில் சிலர் பிரதம மந்திரி மருத்துவ காப்பீடு திட்டத்தில்‌ இணைய விருப்பம் தெரிவித்தனர். இதனையடுத்து அவர்கள் பிரதம மந்திரி காப்பீடு திட்டம்‌ எனும்‌ ஆயுஷ்மான்‌ பாரத்‌ திட்டத்தில்‌ சேருவதற்கான விண்ணப்பங்களில் தங்கள் கிராமத்துக்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களிடம்‌ கையெழுத்துப் பெற்றுள்ளனர். .

கிராம நிர்வாக அலுவலர்களின் ஒப்புதல்‌ பெற்ற விண்ணப்பங்களை இந்த மனுவுடன்‌ சமர்பித்து உள்ளேன்‌. மனுவை பரிசீலனை செய்து இத்துடன்‌ இணைத்து உள்ள பயனாளிகளுக்கு பிரதம மந்திரி காப்பீடு திட்டம்‌ எனும்‌ ஆயுஷ்மான்‌ பாரத்‌ திட்ட மருத்துவ காப்பீடு வழங்குமாறு கேட்டுக்‌ கொள்கிறேன்‌.” இவ்வாறு வானதி ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...