கோவை: கோவையில் பிரதம மந்திரி காப்பீடு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு காப்பீடு வழங்கும்படி மாவட்ட ஆட்சியரிடம் வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கோவை: கோவையில் பிரதம மந்திரி காப்பீடு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு காப்பீடு வழங்கும்படி மாவட்ட ஆட்சியரிடம் வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது;
கோவை மக்கள் சேவை மையத்தின் சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் மோடி முகாம் என்ற பெயரில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.

அந்த முகாமில் பங்கேற்றவர்களில் சிலர் பிரதம மந்திரி மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணைய விருப்பம் தெரிவித்தனர். இதனையடுத்து அவர்கள் பிரதம மந்திரி காப்பீடு திட்டம் எனும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் சேருவதற்கான விண்ணப்பங்களில் தங்கள் கிராமத்துக்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களிடம் கையெழுத்துப் பெற்றுள்ளனர். .
கிராம நிர்வாக அலுவலர்களின் ஒப்புதல் பெற்ற விண்ணப்பங்களை இந்த மனுவுடன் சமர்பித்து உள்ளேன். மனுவை பரிசீலனை செய்து இத்துடன் இணைத்து உள்ள பயனாளிகளுக்கு பிரதம மந்திரி காப்பீடு திட்டம் எனும் ஆயுஷ்மான் பாரத் திட்ட மருத்துவ காப்பீடு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு வானதி ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார்.