கோவையில் தங்க நாணய ஏடிஎம் திறப்பு!

கோவை: கோவையில் ஃபுல் மூன் எக்ஸ்போர்ட்ஸ் தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் தங்க நாணய ஏடிஎம் திறக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் ஃபுல் மூன் எக்ஸ்போர்ட்ஸ் தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் தங்க நாணய ஏடிஎம் திறக்கப்பட்டுள்ளது.



கோவை கிராஸ் கட் சாலையில் சிங்கப்பூர் பிளாசாவில் தங்க நாணய ஏடிஎம் நிறுவப்பட்டுள்ளது. கோவை ஃபுல் மூன் எக்ஸ்போர்ட்ஸ் தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் இந்த ஏடிஎம் அமைக்கப்பட்டுள்ளது.



ஏடிஎம் வாயிலாக பெறும் தங்க நாணயங்களில் க்யூ ஆர் கோடு பொறிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த நாணயங்களை பிற்காலத்தில் விற்கும் போது அதில் உள்ள க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்து அந்த நாணயம் வாங்கிய நாள் போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும்

இது குறித்துப் பேசிய சீனிவாசன் (ஃபுல் மூன் நிறுவன சங்கம்) “24 மணி நேர தங்க நாணய ஏடிஎம் மூலம் 1கி, 2கி, 4கி, 8 கி என்ற விதங்களில் தங்க நாணயங்களை பெற்று கொள்ளலாம். இதற்கான பணத்தை இயந்திரத்தில் பணமாக அல்லது யுபிஐ மூலம் செலுத்தி கொள்ளலாம்.



இந்த நாணயங்களுக்கு 916 சான்றிதழ் தந்துள்ளோம். ரசீதும் கிடைக்கும். கொரோனா காலம் என்பதால் நகை கடைகளுக்கு செல்வதை குறைக்கவே இந்த இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.



ரொக்கமாக நகைக்கடைகளில் 2 லட்சம் வரை மட்டுமே செலுத்தி நாணயம் வாங்க முடியும். யுபிஐ செயலி வாயிலாக ஏடிஎம் மூலம் எவ்வளவு தொகைக்கு வேண்டுமானாலும் நாணயங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் இந்தியாவில் இது போன்ற ஏடிஎம் இது தான் முதல் முறை. இதனை பல்வேறு இடங்களுக்கு விரிவு படுத்த திட்டமிட்டுள்ளோம்,” என்று தெரிவித்தார்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...