வால்பாறையில் பயன்பாட்டுக்கு வராத படகு குழாமில் கழிவு நீர் தேக்கம்... நோய்த்தொற்று பரவும் அச்சத்தில் மக்கள்..!

வால்பாறை: வால்பாறை ஸ்டான் மோர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள பயன்பாட்டுக்கு வராத படகு குழாமில் கழிவு தேங்கி உள்ளது. அதிலிருந்து வீசும் துர் நாற்றத்தால் நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.


வால்பாறை: வால்பாறை ஸ்டான் மோர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள பயன்பாட்டுக்கு வராத படகு குழாமில் கழிவு தேங்கி உள்ளது. அதிலிருந்து வீசும் துர் நாற்றத்தால் நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.



கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி சார்பில் ஸ்டான் மோர் சாலையில் படகு குழாம் அமைக்கப்பட்டுள்ளது. அவசரகதியில் தொடங்கப்பட்டு, இதுவரை பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. இந்தநிலையில் வால்பாறை நகர், காமராஜ் நகர், காந்தி நகர், புது மார்க்கெட், கக்கன் காலனி மற்றும் சிறுவர் பூங்கா ஆகிய பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர்கள், குப்பைகள் படகு குழாமில் வந்து சேர்கிறது.



காமராஜ் நகர் வழியாக வரும் ஆற்றை மறித்து இந்தப் படகு குழாம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், ஆற்றில் வரும் கழிவுநீர் குப்பைகள் அனைத்தும் படகு குழாமில் சேருகிறது. மேலும், படகு இல்லத்திற்காக ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளதால், சிறுவர் பூங்கா வரை கழிவு நீர் தேங்கி நிற்கின்றது. இதன் காரணமாக துர்நாற்றம் வீசுவதோடு அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து, படகு குழாமில் தேக்கி வைக்கப்பட்டுள்ள கழிவுநீரை வெளியேற்றிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். அதோடு, படகு குழாமை சுத்தப்படுத்தி பயன்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும் என்றும் கோருகிறார்கள்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...