கோவை: கோவையில் தர்பூசணி பழம் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை, சின்னட்டியுர், தோலம்பாளையம், வெள்ளியங்காடு, ஆதி மதியனூர், கண்டியூர், மத்தம்பாளையம், ஆலாங்கொம்பு ஆகிய பகுதிகளில் விவசாயிகள் தர்பூசணி சாகுபடி செய்துள்ளனர். கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக தர்பூசணி பழங்களுக்கு உரிய விலை கிடைக்க பெறாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய சின்னட்டியுர் பகுதியை சேர்ந்த தர்பூசணி விவசாயி பிரகாஷ், “கோடை காலத்தில் அறுவடை செய்யும் வகையில் ஒன்றரை மாதத்துக்கு முன்பே தர்பூசணி பயிரிட்டோம். தற்போது தர்பூசணிகள் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் விலை மிகவும் சரிந்துள்ளது.
எனவே, தர்பூசணி பழங்களை கொள்முதல் செய்ய ஆட்கள் இல்லாத காரணத்தினால் செடியிலேயே தர்பூசணி பழங்கள் அழுகி போகும் நிலையில் உள்ளன. ஒரு சிலர் கொள்முதல் செய்ய வந்தாலும் குறைந்த விலைக்கு கேட்கின்றனர். கடந்த பத்து நாட்களுக்கு முன்பு தர்பூசணி பழங்கள் கொள்முதல் விலை கிலோவுக்கு 20 ரூபாய் ஆக இருந்தது.
இப்போது தர்பூசணி கிலோ ஒன்றுக்கு ரூ. 6 மட்டுமே கொள்முதல் செய்கின்றனர். இப்போது விற்கும் கொள்முதல் விலையை விட அதிக அளவு பணம் செலவழித்து உள்ளோம்,” என்றார். கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக வியாபாரிகள் கொள்முதல் செய்யமுன்வருவதில்லை. தர்பூசணிக்கு உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.