சட்டத்துக்குப் புறம்பாக கேரளாவுக்கு மாடுகள் கடத்தல்... கருத்தம்பட்டி போலீஸார் விசாரணை..!

கோவை: திருப்பூர் சாலையில் கார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற லாரியில் சட்டத்துக்குப் புறம்பாக கேரளாவுக்கு மாடுகள் கடத்திச் சென்றது விசாரணையில் கண்டறியப்பட்டது. அதன்பிறகு, லாரியைப் பறிமுதல் செய்து கருத்தம்பட்டி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: திருப்பூர் சாலையில் கார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற லாரியில் சட்டத்துக்குப் புறம்பாக கேரளாவுக்கு மாடுகள் கடத்திச் சென்றது விசாரணையில் கண்டறியப்பட்டது. அதன்பிறகு, லாரியைப் பறிமுதல் செய்து கருத்தம்பட்டி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் காங்கேயம் சாலை ராக்கியபாளையம் பகுதியில் வசித்து வருபவர் அக்‌ஷயா தினேஷ் குமார் இவர் சிவசேனா கட்சியின் மாநில இளைஞரணி துணைச் செயலாளராக இருந்து வருகிறார். இந்தநிலையில், இன்று காலை சேலத்துக்கு சென்ற அவர் அங்கிருந்து அவரது பணிகளை முடித்து விட்டு காரில் திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

செங்கப்பள்ளி அருகே அவர் காரில் வந்தபோது அந்த வழியாக வந்த ஒரு லாரி அவரது காரில் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் அதிர்ச்சி அடைந்த தினேஷ்குமார் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் தெக்கலூர் அருகே போலீசார் அந்த லாரியை தடுத்து நிறுத்த முயன்றபோது அந்த லாரி நிற்காமல் சென்றது. இந்தநிலையில் தனது காரில் மோதி விட்டு நிற்காமல் சென்ற லாரியை பின்தொடர்ந்து சென்ற அக்‌ஷயா தினேஷ்குமார், அந்த லாரியை கருமத்தம்பட்டி டோல்கேட்டில் தடுத்து நிறுத்தினார்.

லாரியை போலீஸில் ஒப்படைத்த போது, ஆய்வு செய்த போலீஸார் அந்த லாரியில் சட்டத்திற்குப் புறம்பாக மாடுகளை ஏற்றிக்கொண்டு கேரளாவுக்கு கடத்திச் சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து கருமத்தம்பட்டி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...