கோவை: திருப்பூர் சாலையில் கார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற லாரியில் சட்டத்துக்குப் புறம்பாக கேரளாவுக்கு மாடுகள் கடத்திச் சென்றது விசாரணையில் கண்டறியப்பட்டது. அதன்பிறகு, லாரியைப் பறிமுதல் செய்து கருத்தம்பட்டி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் காங்கேயம் சாலை ராக்கியபாளையம் பகுதியில் வசித்து வருபவர் அக்ஷயா தினேஷ் குமார் இவர் சிவசேனா கட்சியின் மாநில இளைஞரணி துணைச் செயலாளராக இருந்து வருகிறார். இந்தநிலையில், இன்று காலை சேலத்துக்கு சென்ற அவர் அங்கிருந்து அவரது பணிகளை முடித்து விட்டு காரில் திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
செங்கப்பள்ளி அருகே அவர் காரில் வந்தபோது அந்த வழியாக வந்த ஒரு லாரி அவரது காரில் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் அதிர்ச்சி அடைந்த தினேஷ்குமார் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் தெக்கலூர் அருகே போலீசார் அந்த லாரியை தடுத்து நிறுத்த முயன்றபோது அந்த லாரி நிற்காமல் சென்றது. இந்தநிலையில் தனது காரில் மோதி விட்டு நிற்காமல் சென்ற லாரியை பின்தொடர்ந்து சென்ற அக்ஷயா தினேஷ்குமார், அந்த லாரியை கருமத்தம்பட்டி டோல்கேட்டில் தடுத்து நிறுத்தினார்.
லாரியை போலீஸில் ஒப்படைத்த போது, ஆய்வு செய்த போலீஸார் அந்த லாரியில் சட்டத்திற்குப் புறம்பாக மாடுகளை ஏற்றிக்கொண்டு கேரளாவுக்கு கடத்திச் சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து கருமத்தம்பட்டி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.