தோட்டக்கலைத் துறை மூலமாக சொட்டு நீர் பாசனம் அமைக்க மானியம்... கோவை ஆட்சியர் அறிவிப்பு..!

கோவை: தோட்டக்கலைத் துறை மூலமாக சொட்டு நீர் பாசனம் அமைக்க மானியம் வழங்கப்படுவதாகவும் அதற்காக விண்ணப்பிப்பதற்கு விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.


கோவை: தோட்டக்கலைத் துறை மூலமாக சொட்டு நீர் பாசனம் அமைக்க மானியம் வழங்கப்படுவதாகவும் அதற்காக விண்ணப்பிப்பதற்கு விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

தோட்டக்கலைத் துறை மூலமாக சொட்டு நீர் பாசனம் அமைக்க மானியம் விவசாயிகளுக்கு வழங்கப்படுவது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தோட்டக்கலைத் துறையின் மூலம் நுண்நீர் பாசன திட்டத்தின் கீழ் சொட்டுநீர் பாசன அமைப்பு நிறுவன சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவிகிதம் மானியமும் வழங்கப்படுகிறது.

சிறு குறு விவசாயிகள் அதிகபட்சம் 2 ஹெக்டேர் வரையிலும் இதர விவசாயிகள் 5 ஏக்கர் வரையிலும் பயன்பெறலாம். நுண்ணீர் பாசனம் அமைக்க குழி எடுப்பதற்கு ஒரு ஏக்கருக்கு ரூபாய் 3,000 மானியம் வழங்கப்படுகிறது. நுண்ணீர் பாசனம் அமைக்க முன் வரும் விவசாயிகளுக்கு துணைநிலை நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் பாசன நீர் குழாய்கள் ஒரு ஹெக்டேருக்கு ரூபாய் 10,000 நீரை இறைப்பது ஆயில் என்ஜின் மின் மோட்டார் அமைக்க ரூபாய் 15,000 மற்றும் தரை நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்க ரூபாய் 40 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.

பயன்பெற விரும்பும் விவசாயிகள் சிட்டா அடங்கல், சிறு குறு விவசாயிகளுக்கான சான்று நிலவரைபடம் மண் மற்றும் நீர் பரிசோதனை அறிக்கை குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், விண்ணப்பதாரரின் புகைப்படம், வட்டாட்சியரால் வழங்கப்பட்ட அனுபோக சான்று ஆகிய ஆவணங்களை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...