குன்னூர் வெலிங்டன் கண்டோன்மெண்ட் அலுவலகத்தில் 3 பேருக்கு கொரோனா உறுதியானதால் அலுவலகம் மூடல்!

நீலகிரி: குன்னூர் வெலிங்டன் கண்டோன்மெண்ட் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் அலுவலர் உள்பட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது.


நீலகிரி: குன்னூர் வெலிங்டன் கண்டோன்மெண்ட் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் அலுவலர் உள்பட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் கண்டோன்மெண்ட் அலுவலகத்தில் 15 க்கும் மேற்பட்ட அலுவலர்களும், 300 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர். இந்த அலுவலகம் மத்திய பாதுகாப்பு துறைக்கு கீழ் இயங்கி வருகிறது. இங்குள்ள 7 வார்டுகளில் பொது மக்களும், மீதமுள்ள பகுதிகளில் ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் குடியிருப்பு உள்ளது. இந்த அலுவலகத்தில் சொத்து வரி, குடிநீர், பிறப்பு இறப்பு சான்று உட்பட பல பணிகளுக்காக பொதுமக்கள் வந்து செல்வர்.

இந்நிலையில் அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பெண் அலுவலர், 2 ஆண் அலுவலர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அலுவலகத்தை தற்காலிகமாக மூட முதன்மை அதிகாரி பூஜா பலிச்சா உத்தரவிட்டார். இங்கு பணிபுரியும் பலரிடம் இருந்து மாதிரிகள் எடுத்து செல்லப்பட்டுள்ளன.

அந்த மாதிரிகளின் முடிவுகள் வரும் வரை அலுவலகம் தற்காலிகமாக மூடப்படும் என்றும் அதன் பின்னர் திறப்பது குறித்து உயர் அதிகாரி, சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை பேரில் முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். பாதுகாப்பு துறைக்கு கீழ் செயல்படும்வெலிங்டன் கண்டோன்மென்ட் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...