பொள்ளாச்சி: கொரோனா பெருந்தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, பொள்ளாச்சியில் 3000 சதுர அடிக்கு அதிகமாக உள்ள வணிக வளாகங்கள் மூடப்பட்டன. நோய்த் தொற்று அதிகரிப்பைத் தடுக்க சுகாதாரத்துறை நடவடிக்கை.

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 3000 சதுர அடிக்கு மேல் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து பொள்ளாச்சியில் இன்று காவல் நிலையம் சாலை, மகாலிங்கபுரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வந்த 8 வணிக வளாகங்களை வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மூட உத்தரவிட்டனர்.

இதனையடுத்து 3000 சதுர அடிக்கு மேல் இருந்த வணிக வளாகங்கள் மூடப்பட்டன. நகரில் நோய்தொற்று தொடர்ந்து அதிகரித்து வந்ததால் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் மேலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று சுகாதாரத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.