கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் குடிநீர் விநியோகத்தில் பாதிப்பு உண்டாகியுள்ளது. இதனை உடனடியாக சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் குடிநீர் விநியோகத்தில் பாதிப்பு உண்டாகியுள்ளது. இதனை உடனடியாக சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை நகரத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் வணிக நிறுவனங்களும் தங்கும் விடுதிகளும் ஏராளமாக உள்ளன. அக்காமலை புல்வெளி பகுதியிலிருந்து வரும் நீரை கருமலை அருகே உள்ள தடுப்பணையில் தேக்கி வால்பாறைக்கு இயற்கை உந்து சக்தி மூலம் தரைமட்ட நீர் தொட்டியில் தேக்கி வால்பாறை நகருக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வால்பாறை நடு மலைச்சாலையில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக நடுமலை தேயிலைத் தோட்டம் அருகே சாலையில் ஓரத்தில் வந்து கொண்டிருக்கும் பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.

இதனால் தடுப்பணையில் இருந்து வால்பாறைக்கு வரும் குடிநீர் முற்றிலும் வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக நேற்று முதல் வால்பாறையில் குடிநீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். நகராட்சி நிர்வாகம், உடைந்த குழாயை உடனடியாக மாற்றி குடிநீர் விநியோகத்தை சரி செய்யும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.